Home இந்தியா ‘டி 20’ கிரிக்கெட் போட்டியை விளம்பர களமாக்கிய பாரதிய ஜனதா!

‘டி 20’ கிரிக்கெட் போட்டியை விளம்பர களமாக்கிய பாரதிய ஜனதா!

799
0
SHARE
Ad

bjp-3012டெல்லி, மார்ச் 25 – இளம் வாக்காளர்களை கவரும் வகையில், வங்கதேசத்தில் நடக்கும், ‘டி20′ உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான, விளம்பர களமாக்கியுள்ளது.

பா.ஜ.க. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவித்த நாள் முதல், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, பா.ஜ.க. தீவிரப்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களையும், பா.ஜ.க. விளம்பரங்களாக மாற்றி வருகிறது. மோடியை, ‘டீ கடை நடத்தியவர்’ என, காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர் விமர்சித்ததைத் தொடர்ந்து, டீ குடித்தபடி, நாட்டின் கடை கோடி மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்,

#TamilSchoolmychoice

மோடியின் டீ கடை பிரசாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வங்கதேசத்தில் நடந்து வரும், ‘டி20’ உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, பார்க்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்தப் போட்டிகளின் போது, தற்போது, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இந்த விளம்பரங்கள், கார்ட்டூன் போல வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதில், வரும் கதாபாத்திரங்கள் பேசும்.

கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு முன், இரு அணிகளில், ‘பேட்டிங்’ செய்வது யார், பந்து வீசுவது யார் என்பதை முடிவு செய்ய, இரு அணி கேப்டன்கள் மத்தியில், பூவா, தலையா போடுவார் நடுவர். இலை, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர், பூவா, தலையா போடுவதற்கு, கேப்டன்களை அழைப்பார்.

ஒரு அணியின் கேப்டன் வருவார். மற்றொரு பக்கத்தில், ஆளே இருக்கமாட்டார். இதனால், களத்தில் இருக்கும் கேப்டனுக்கு சாதகமாக போட்டி முடிவு அறிவிக்கப்படும். அந்த நேரத்தில் தாமரை சின்னம் காட்டப்படுகிறது.

இதன்மூலம், ‘தேர்தல் களத்தில் மோடி தான் உள்ளார்’ என்பதாக பொருள். மற்றொரு விளம்பரத்தில், பேட்ஸ்மேன் பந்தை எதிர்நோக்கி காத்திருப்பார். அப்போது, விக்கெட் கீப்பர், விக்கெட்டை தள்ளி வைத்து விடுவார்.

பந்து வீசுபவரும், தள்ளி வைக்கப்பட்ட விக்கெட்டுக்கு பந்து வீசி அவுட்’ ஆக்குவார். ஆனால், இந்த ஆட்டத்தை நடுவர் ஏற்க மாட்டார். இந்த ஆட்டம் போல், எதிர்க்கட்சிகள் தேர்தலில் மோசடி செய்யலாம். ஆனால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

தாமரை தான் வெற்றி பெறும்’ என, விளம்பரம் முடிகிறது. இந்த விளம்பரங்களுக்கு இறுதியில், தாமரை சின்னம் வரும்போது தான், தேர்தல் விளம்பரம் என, புரிந்து கொள்ள முடியும். விளம்பரங்கள் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டு உள்ளன.