Home நாடு MH370: கறுப்புப் பெட்டி கிடைக்கும் வரை தேடும் பணி ஓயாது – நஜிப்

MH370: கறுப்புப் பெட்டி கிடைக்கும் வரை தேடும் பணி ஓயாது – நஜிப்

521
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், மார்ச் 25 – மாயமான MH370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் முடிவடைந்திருக்கிறது என்று நேற்று தான் அறிவித்ததை பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று தற்காத்துப் பேசியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய நஜிப், “எந்த ஒரு புதிய தகவலையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நமது கடமை. விமானம் கிடைக்கும் வரை நமது தேடுதல் பணியும், மீட்புப் பணியும் ஓயப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நிறைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதை நான் அறிவேன். ஆனால் விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே உண்மையான பதிலை அறிவிக்க முடியும். அரசாங்கம் எந்த தகவலையும் பயணிகளின் உறவினர்களிடம் மறைக்கவில்லை. அதேவேளை அவர்களுக்கு கிடைக்கப் போகும் எந்த ஒரு தகவலையும் நாம் தடுக்கப்போவதும் இல்லை” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.