Home கலை உலகம் நிஜ வாழ்க்கையில் நான் குடித்ததே இல்லை! – சிவகார்த்திகேயன்!

நிஜ வாழ்க்கையில் நான் குடித்ததே இல்லை! – சிவகார்த்திகேயன்!

539
0
SHARE
Ad

Sivakarthikeyanசென்னை, மார்ச் 25 – நிஜ வாழ்க்கையில் நான் குடித்ததோ, புகை பிடித்ததோ இல்லை என்று சத்தியம் செய்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் அறிமுகமானதிலிருந்து அவரது பெரும்பாலான படங்களில் நடிக்கும் காட்சிகளைவிட குடிக்கும் காட்சிகளில்தான் அதிகம் தோன்றியிருப்பார்.

அவரது சமீபத்திய வெற்றியடைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் மதுக்கடை பாடல் காட்சி இடம்பெற்றது. இது சரியா. புகைக்கும், குடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், நான் சத்தியமா நிஜத்தில் குடிச்சதே இல்லை. புகைப் பிடிச்சதும் இல்லை. ஆனா படத்தின் காட்சிக்குத் தேவை எனும்போது அதற்கு மறுப்பு சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகன் கிடையாது.

#TamilSchoolmychoice

எனது அடுத்த படமான டாணாவில் மது, புகை காட்சிகளே இருக்காது. இனி வரும் படங்களில் புகைக்கிற, மது குடிக்கிற காட்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்  என்றார்.