Home உலகம் காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

488
0
SHARE
Ad

22-nawaz-sharif-20-600காஷ்மீர், மார்ச் 25 – இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.

அணுசக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இது குறித்து பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சனை பற்றி பேசுவதற்காக பாகிஸ்தான் அணுகும்போதும் இந்தியா தயங்கிய வருகிறது.

இருதரப்பினரிடையே உள்ள பிரச்சனையை சுமூகமாக பேசித் தீர்க்க மூன்றாவது நாடான அமெரிக்காவின் பங்களிப்பு வேண்டும்” என்று ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கது.