Home நாடு MH370: “பதவி விலகுவது எனது தனிப்பட்ட முடிவு” – மாஸ் தலைவர்

MH370: “பதவி விலகுவது எனது தனிப்பட்ட முடிவு” – மாஸ் தலைவர்

558
0
SHARE
Ad

MAS-CEO-Ahmad-Jauhari-Yahyaகோலாலம்பூர், மார்ச் 25 – மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது என்று முடிவு செய்துவிட்ட காரணத்தால், இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மலேசியா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி அகமட் ஜுஹாரி யாஹ்யா பதவி விலகுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இன்று கேஎல்ஐஏ அனைத்துல விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜுஹாரி, “அது என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதைப் பற்றி பின்னர் யோசிப்பேன். தற்போது விமானத்தை தேடுவது தான் முக்கியம்” என்று பதிலளித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice