Home நாடு MH370: கடலில்122 பாகங்கள் மிதப்பதாக துணைக்கோள் படங்கள் காட்டுகின்றன!

MH370: கடலில்122 பாகங்கள் மிதப்பதாக துணைக்கோள் படங்கள் காட்டுகின்றன!

498
0
SHARE
Ad

Debrisகோலாலம்பூர், மார்ச் 27 – இந்தியப் பெருங்கடலில் சுமார் 122 சந்தேகத்திற்குரிய பொருட்கள் மிதப்பதாக பிரான்ஸ் நாட்டு துணைக்கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. அது MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

அப்படங்களை நேற்று அந்நாட்டின் விமானப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மலேசியாவிடம் வழங்கியது.

நேற்று மாலை புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC) நடைபெற்ற தினசரி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இடைக்கால போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், “இந்தியப் பெருங்கடலில் 400 ஸ்கொயர் கிலோமீட்டர் பரப்பளவில் இந்த 122 பாகங்கள் சிதறிக் கிடப்பதாக துணைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.அவைகளில் சில 23 மீட்டர் நீளமுடையது. சில பிரகாசமாக தெரிகின்றன. ஒருவேளை திடப்பொருட்களாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2,557 கிலோமீட்டர் தொலைவில் இந்த பொருட்கள் மிதக்கின்றன” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த பொருட்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளின் துணைக்கோள்கள் கண்டறிந்த பொருட்கள் மிதந்த பகுதிக்கு மிக அருகில் என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

மேலும் “நமது தேடுதல் பணியில் கிடைத்த இன்னொரு தடயம் அவ்வளவு தான். அந்த பொருட்கள் MH370 விமானத்துடையது தான் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது” என்றும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.