Home கலை உலகம் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ வெளியீடு தள்ளிப் போகின்றது! மே 16ஆம் தேதி வெளியாகலாம்!

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ வெளியீடு தள்ளிப் போகின்றது! மே 16ஆம் தேதி வெளியாகலாம்!

621
0
SHARE
Ad

kochadaiyan_new_still_003.w540சென்னை, மார்ச் 27 – ரஜினிகாந்த் படமென்றால், ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாவது வழக்கம். அவர் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யாஇயக்கியுள்ள  கோச்சடையான்படம் என்றைக்கு வெளிவரும் என்பது பற்றித்தான் தினந்தோறும் புதுப் புது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆகக்  கடைசியாக இன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி கோடை விருந்தாக மே மாதம் 16ஆம்  இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதைதிரைக்கதைவசனத்தைகே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார்.

ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்துஇருக்கிறார். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா ஆகியோரும்படத்தில் நடித்துள்ளனர். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும் எழுதியபாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

கோச்சடையான்படம் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

தணிக்கை குழுவினரும் படத்திற்கு யுசான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும், குழந்தைகள் உட்பட இந்தப் படத்தைப் பார்க்கலாம். இதன் மூலம் அரசின் வரிவிலக்குக்கும் இப்படம் தகுதி பெற்றுள்ளது.

அடுத்த மாதம் ஏப்ரலில் படத்தை வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் வெளியீட்டுத் தேதி மேலும் தள்ளிப் போகலாம். பெரும் பொருட் செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதால், படம் வெளியாகும் தருணத்தில் கிரிக்கெட், தேர்தல் போன்ற இடையூறுகளால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் படத்தின் தயாரிப்பாளர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில்இப்படம் வெளியிடப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவரும் இப்படத்தின் முதல் பிரதியை தயார் செய்ய இயக்குநர்சவுந்தர்யா சீனா சென்றிருக்கிறார். அனைத்து பணிகளும் முடிந்து, முதல்பிரதி முடிந்தவுடன்தான் சென்னை திரும்ப திட்டமிட்டு இருக்கிறாராம்.

“‘கோச்சடையான்படத்தினை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகின்றது.

அதுமட்டுமன்றி, தமிழகத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும்நிலையில் படத்தினை தற்போது வெளியிட்டால் நன்றாக இருக்காது. வசூலும் பாதிப்படையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

தேர்தல்முடிந்து யாருக்கு வெற்றி என்ற அறிவிப்பு மே 16-ம் தேதி வெளியாகஇருக்கிறது. அன்றைய தினமேபடத்தினை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.