Home இந்தியா அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் தம்பி!

அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் தம்பி!

552
0
SHARE
Ad

WR_20140328195604மதுரை, மார்ச் 29 – மதுரையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஜெயலலிதா பேசிய கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்பி பால்ராஜ், மற்றும் அவரது மனைவி வெங்கடலட்சுமி, ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களுக்கு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய முதல்வர் நலம் விசாரித்தார். மேலும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் சோலைராஜா, திரைப்பட விநியோகஸ்தர்கள் அன்பு செழியன், செல்வின்ராஜ், திமுக புறநகர் மாவட்ட வழக்கறிஞர் நந்தகோபன்,

பாமக மாநில மகளிரணி செயலாளர் சாந்தி, முன்னாள் தேமுதிக கவுன்சிலர் பாலயோகி உட்பட 3770 பேர் அதிமுகவில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.