Home இந்தியா ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்கவில்லை – அமீர் கான்!

ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்கவில்லை – அமீர் கான்!

584
0
SHARE
Ad

amerkhanமும்பை, மார்ச் 29 – நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி விளக்கமளித்துள்ளார் நடிகர் அமீர் கான். பிரபல இந்தி நடிகரான அமீர் கான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியினர் சிலர், சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பி வருகின்றனர்.

ஒருசிலர் பிரச்சார சுவரொட்டிகளிலும் அமீர்கான் படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி உட்பட, நான் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என நடிகர் அமீர் கான் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் அமீர்கான்.

அதில் நான் தொடக்கத்தில் இருந்தே எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும், எனவே எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இத்தகவலை அமீர்கானின் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பிரச்சாரப் படங்களில் அமீர்கான் படத்தை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ விளம்பரப்பிரிவு பயன் படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.