Home உலகம் தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டம்!

தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டம்!

558
0
SHARE
Ad

M_Id_444259_Thailand_protestYingluck_Shinawatraதாய்லாந்து,  மார்ச் 31 – தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், அந்நாட்டின் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில், இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பேரணியில் பங்கேற்ற எதிர்பாளர்கள், யிங்லக் ஷினவத்ரா மக்கள் நலனில் கவனமின்மையும், ஆட்சியில் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தாய்லாந்து நாடாளுமன்றத்தின் மேலவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக அரசை நிறுவி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், ஊழலுக்கு எதிரான நடைமுறைகளில் முன்கூட்டியே சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்தல் யிங்லக் ஷினவத்ராவின் தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.