Home கலை உலகம் எனக்கு அரசியல் வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்!

எனக்கு அரசியல் வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்!

577
0
SHARE
Ad

udhayanidhi-stalin-2சென்னை, மார்ச் 31 – தி.மு.க பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின்தான் இப்போது தி.மு.கவின் அரசியல் வாரிசு. ஆனால் அவரது வாரிசான உதயநிதிக்கு அரசியலில் ஆர்வமில்லை.

திரைப்படத் தயாரிப்பாளராக சினிமாவுக்கு வந்த உதயநிதி, இப்போது நடிகராகவும் ஆகிவிட்டார். அவர் சினிமாவில் நடிப்பதே அரசியலில் தனக்கு நட்சத்திர அந்தஸ்த்து தேடிக் கொள்வதற்காகத்தான் என்ற விமர்சனங்கள் உண்டு.

ஆனால் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற பல்வேறு காலகட்டங்களில் உதயநிதி கூறிவந்திருக்கிறார். இப்போது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மு.க.ஸ்டாலின், தற்போது நீலகிரி தொகுதியில் ஆ.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் உதநிதியும் சென்று வருகிறார். உதயநிதி பிரச்சாரம் செய்யாவிட்டாலும் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.

சத்யமங்கலம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் வீட்டிற்கு விருந்துக்கு வந்த உதயநிதி அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அப்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவருக்கு துணையாக செல்வது என் வழக்கம். 11 வயதில் இருந்தே இதை கடைபிடித்து வருகிறேன். அப்படித்தான் இப்போதும் உதவிக்கு வந்திருக்கிறேன்.

ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. எனக்கு அரசியல் வேண்டாம். நல்ல நடிகனாக வளர வேண்டும் என்பதே என் ஆசை. அதுவும் பத்து பேரை அடித்து பன்ஞ் வசனங்கள் பேசுகிற நாயகன் என்ற ஆசைகூட கிடையாது. சந்தோசமாக மக்களை சிரிக்க வைக்கிற நடிகனாக இருந்தால் போதும்.

தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறேன். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. இந்த இடைவெளியில் அப்பாவுக்கு உதவ வந்திருக்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.