Home உலகம் MH370: நஜிப்பின் முடிவு சரிதான் – ஆஸ்திரேலியா பிரதமர் கருத்து

MH370: நஜிப்பின் முடிவு சரிதான் – ஆஸ்திரேலியா பிரதமர் கருத்து

467
0
SHARE
Ad

masmh370australiaPMtonyabbott2003பெர்த், மார்ச் 31 – மாயமான மலேசிய விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்துள்ளது என்பதற்கு இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து ஆதாரங்களும் சரியாகப் பொருந்துகின்றன என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் முடிவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டோனி அபாட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானம் இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்துள்ளது என்று மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்தது சரியான முடிவு தான். இப்படிப்பட்ட முடிவு கிடைத்த பிறகு அதை பொதுமக்களிடம் அறிவிப்பது அவரது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா பெரிதும் துணை புரிந்து வருகின்றது. இது ஒரு மிதமிஞ்சிய கடினமான தேடும் வேட்டை. அவ்வளவு பெரிய கடற்பரப்பில் நமக்குக் கிடைத்த சிறிய தகவலின் அடிப்படையில் தேடிக் கொண்டிருக்கின்றோம்” என்றும் டோனி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“உலகிலுள்ள முதன்மை விமான தொழில்நுட்பம் தெரிந்த நிபுணர்கள், மாயமான விமானம் குறித்து மூளையை கசக்கிப் பிழிந்து வருகின்றனர். விமானம் கிடைக்கும் வரை தேடுதல் பணி ஓயாது. அதற்கென்று எந்த ஒரு வரையறையையும் நிர்ணயிக்கப்படவில்லை” என்றும் டோனி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி 239 பயணிகளுடன் மாயமான MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்துள்ளது என்று மலேசிய அரசாங்கம் முடிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி நஜிப் வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் (Air Accidents Investigation Branch – AAIB), அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விமானம் சென்ற பாதையை கண்டறிந்ததில், இறுதியாக விமானம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்து இந்தியப் பெருங்கடலின் நடுவே முடிவடைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சோதனையை அவர்கள் இதற்கு முன் செய்தது இல்லை” என்று அறிவித்தார்.

இருப்பினும், இதுவரை அதற்கான ஆதாரங்களாக விமானத்தின் ஒரு சிறு பாகம் கூட கிடைக்கவில்லை.

இதனால் கோபமடைந்த பயணிகளின் உறவினர்கள், மலேசிய அரசாங்கம் அவசரப்பட்டு விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக அறிவித்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.தனது தவறுக்கு புத்ரா ஜெயா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.