Home இந்தியா ரூ.20 கோடி வரி செலுத்திய டோனி!

ரூ.20 கோடி வரி செலுத்திய டோனி!

523
0
SHARE
Ad

MSD-IPL1பாட்னா,  மார்ச் 31 – இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக ரூ.20 கோடி செலுத்தி இருக்கிறார்.

பீகார் மற்றும் ஜார்கண்ட மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் ஜார்கண்டை சேர்ந்த டோனி தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
டோனி கடந்த ஆண்டில் வருமான வரியாக ரூ.22 கோடி செலுத்தி இருந்தார்.

அதனை விட அவர் இந்த ஆண்டு குறைவான தொகை வருமான வரி கட்டி இருப்பதன் மூலம் அவரது வருமான விகிதம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை வருமானவரி முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.கே.ராய் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.