Home இந்தியா தனிக்கட்சி தொடங்க மாட்டேன் – மு.க.அழகிரி!

தனிக்கட்சி தொடங்க மாட்டேன் – மு.க.அழகிரி!

767
0
SHARE
Ad

alakiriநாமக்கல்,  ஏப்ரல் 1 – நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி, தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்திருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவாக இருந்திருப்பாரா?
பதில்: அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எனக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

#TamilSchoolmychoice

கேள்வி: ஏன் உங்களை கட்சியை விட்டு நீக்கினார்கள்.?
பதில்: தலைவர் கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?
பதில்: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.

கேள்வி: அப்போது யார் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்?

பதில்: எனக்கு ஜோசியம் சொல்லத் தெரியாது.

கேள்வி: தனிக்கட்சி தொடங்குவீர்களா?
பதில்: தனிக்கட்சி தொடங்க மாட்டேன். தி.மு.கவில் தான் இருப்பேன். தலைவர் கலைஞர்தான் எனக்கு தலைவர். தி.மு.க. கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன் என மு.க.அழகிரி கூறினார்.