அமெரிக்காவில் மிகப் பிரபலமடைந்து வரும் தனது ‘ஐடியூன்ஸ் ரேடியோ’ (iTunes Radio) செயலியின் வர்த்தகத்தை பெருக்கவும்,தனது போட்டியாளரான பேண்டொரா (Pandora) விற்கு மாற்றாக செயல்படவும், ஆப்பிள் நிறுவனம் தேசிய பொது வானொலி (NPR) உடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 24-ஆம் தேதி, தேசிய பொது வானொலியின் செய்திகளை முதன் முறையாக ஐடியூன்ஸ் ரேடியோவில் அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம், முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுடன் இதனையும் ஒலிபரப்பி வருகின்றது. மேலும் பல செய்தி ஒலிபரப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தேசிய பொது வானொலியின் டிஜிட்டல் ஊடகத் துணை தலைவர் ஸாச் பிராண்ட் கூறியதாவது:-
“டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக NPR, ஆப்பிளின் ‘ஐடியூன்ஸ் ரேடியோ’ உடன் இணைந்து செய்திகளை ஒலிபரப்பிவருகிறோம்” என்று கூறியுள்ளார்.
எனினும் வர்த்தக நோக்கம் இல்லாத NPR நிறுவனத்துக்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் இடையேயான வணிக பரிவர்த்தனைகள் சரிவரத்தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.