Home நாடு காக்பிட்டிலிருந்து கடைசியாகக் கிடைத்த வார்த்தைகள் “குட்நைட் மலேசியன் 370”

காக்பிட்டிலிருந்து கடைசியாகக் கிடைத்த வார்த்தைகள் “குட்நைட் மலேசியன் 370”

725
0
SHARE
Ad

MAS (1)கோலாலம்பூர், ஏப்ரல் 1 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக அதிகாலை 1.19 மணிக்கு கிடைத்த வார்த்தைகள் “குட்நைட் மலேசியன் 370” என்பதை மலேசிய விமானப் போக்குவரத்து இலாகா நேற்று உறுதிப் படுத்தியது.

இதற்கு முன்னதாக, “ஆல்ரைட் குட்நைட்” தான் கடைசி வார்த்தைகள் என்று கூறப்பட்ட தகவலில் உண்மை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து கடைசியாகக் கிடைத்த இந்த வார்த்தைகளை கூறியது தலைமை விமானியா அல்லது துணை விமானியா என்பது குறித்து தடயவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், பயணிகளின் உறவினர்களுக்கு விளக்கமளிக்க, அதன் முழு விபரங்களையும் வெளியிடுமாறு விசாரணை அதிகாரிகளை அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது.