Home வணிகம்/தொழில் நுட்பம் அமேசான் நிறுவனத்தின் ஜெர்மானிய கிளையில் ஊழியர்கள் போராட்டம்!

அமேசான் நிறுவனத்தின் ஜெர்மானிய கிளையில் ஊழியர்கள் போராட்டம்!

605
0
SHARE
Ad

cairo-police-protesters-584-723533சியாட், ஏப்ரல் 1 – அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமேசான் என்ற நிறுவனம், இணைய வர்த்தக மூலமாக மின்னணு பொருட்களை விற்பனை செய்துவருகிறது.

ஜெர்மனியில் உள்ள இதன் ஒன்பது முக்கிய தளங்களில், லெய்ப்சிக் நகரில் செயல்பட்டுவரும் தளம் சரக்கியல் (Logistics) – ஐ பிரதானமாக கொண்ட மையமாகும்.

இங்கு பணிபுரியும் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களில், 700 பேர் வெர்டி எனப்படும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். இங்கு சமீபகாலமாக தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு குறித்த போராட்டங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஜெர்மனியின் அனைத்து மையங்களிலும் பணிபுரியும் மொத்தம் 9000 தொழிலாளர்களுக்கும் அந்நாட்டின் விநியோகத் துறையை ஒத்த ஒரே அளவான சம்பள விகிதத்தைப் பெற்றுத்தர வெர்டி முயன்று வருகின்றது.

ஆனால் அங்கு சரக்கியல் (Logistics) துறைகளுக்கு குறைந்த அளவான சம்பளமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதனைக் கணக்கீடாகக் கொண்டே ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வருவதாகக் கூறி அமேசான் நிறுவனம், வெர்டியின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

எனவே, லெய்ப்சிக் பிரிவு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். இது தொடர்பாக வெர்டி அமைப்பின் தகவல் தொடர்பாளரான தாமஸ் ஸ்னேடர் கூறியதாவது,

“லெய்ப்சிக் நகரில் செயல்பட்டுவரும் அமேசான் தளத்தில் பணிபுரியும் 2000 ஊழியர்களில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லை. எனினும் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.