Home நாடு மலேசிய இந்து தர்ம மாமன்றத் தோற்றுநர் கரு.சாத்தையா காலமானார்!

மலேசிய இந்து தர்ம மாமன்றத் தோற்றுநர் கரு.சாத்தையா காலமானார்!

687
0
SHARE
Ad

10168964_4083843469745_563974473_nகோலாலம்பூர், ஏப்ரல் 1 – மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தோற்றுநரும், அந்த இயக்கத்தின்  ஞான ஆசிரியருமான கரு. சாத்தையா நேற்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் சிறிது காலம் உடல்நலம் குன்றிருந்தார்.

நேற்று பின்னிரவு 2.30 மணியளவில் தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் அவர் காலமானதாக, இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை கூறினார்.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் வளர்ச்சிக்கு கடந்த 45 ஆண்டு காலம் சாத்தையாவின் பங்களிப்பு போற்றுதலுக்குரியதாகும். இவர் சமூக, சமயப் பணிகளை ஆற்றி, அதில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, பலரை குறிப்பாக இளைஞர்களை இந்து சமயத்தில் ஈடுபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அவரது இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை ஏப்ரல் 2ஆம் நாள், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை 101, ஜாலான் கிரியான், தாமான் ரெயின்போ, ஜாலான் ஈப்போ 4வது மைல், கோலாலம்பூர் (101, Jalan Krian, Taman Rainbow, Jalan Ipoh, 4th Mile, Kuala Lumpur) என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

அதன் பின்னர் அன்னாரது நல்லுடல் செந்துல் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.