Home கலை உலகம் பத்ம பூஷண் விருது பெற்ற கமலஹாசன், வைரமுத்து!

பத்ம பூஷண் விருது பெற்ற கமலஹாசன், வைரமுத்து!

635
0
SHARE
Ad

vairamuthu1டெல்லி, ஏப்ரல் 1 – டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன், பாடாலாசிரியர் வைரமுத்து ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பத்ம பூஷன் விருது வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் கலைத் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காக, மத்திய அரசு சார்பில் பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருகள் வழங்கப்படுகிறது. 2013-ஆம் ஆண்டுக்கான விருது பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.31-kamal-award

இதில் தமிழ் திரையுலக சார்பில் நடிகர் கமல்ஹாசன், பாடாலாசிரியர் வைரமுத்து ஆகியோரும் விருது பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதற்கிடையில், இன்று டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இதில் அனைத்து கலைஞர்களுக்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கெளரவித்தார். கமல்ஹாசன், வைரமுத்து இருவரும் கலந்துகொண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டனர்.