Home இந்தியா முதல் முறையாக வைகோவுக்கு பிரசாரம் செய்யப் போகும் விஜயகாந்த்!

முதல் முறையாக வைகோவுக்கு பிரசாரம் செய்யப் போகும் விஜயகாந்த்!

580
0
SHARE
Ad

31-vaiko-vijayakanth53-600நெல்லை, ஏப்ரல் 1 – தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தேமுதிக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14-ஆம் தேதி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து 2-ஆம் கட்டமாக தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளிலும் விஜயகாந்த் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இதற்காக நாளை விஜயகாந்த் நெல்லை வருகிறார். தொடர்ந்து தென்காசி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சதன்திருமலை குமாரை ஆதரித்து சங்கரன் கோவிலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.

அதனை தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 இடங்களில் வைகோவை ஆதரித்து விஜயகாந்த் பேசுகிறார்.