கோலாலம்பூர், ஏப்ரல் 1 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நிறைய மலேசியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
சுதந்திரமான கருத்துக்கணிப்பு மெர்டேக்கா மையம் (independent pollster Merdeka Center) கடந்த மார்ச் மாதம் நடத்திய அந்த ஆய்வில், 44 சதவிகிதம் (1,005 பேர்) நஜிப்பின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் இருந்து 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதே வேளையில், நஜிப்பை ஏற்றுக்கொண்டவர்களின் விகிதம் 52 சதவிகிதம் ஆகும்.
இந்த ஆய்வு மார்ச் 7 ஆம் தேதி முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.