Home தொழில் நுட்பம் விரைவில் ஆப்பிளின் ஐபோன் 6!

விரைவில் ஆப்பிளின் ஐபோன் 6!

576
0
SHARE
Ad

iphone-6ஏப்ரல் 2 – ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6 ஐ எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது.இந்த ஐபோன் ஆனது 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவு என இரு ரகங்களில் வர இருக்கின்றது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய ஐபோன் தயாரிப்பிற்காக ஆப்பிள் நிறுவனம் ஜப்பானின் மின்னியல் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான ‘ஷார்ப்’ (Sharp) உடன் இணைந்துள்ளது.இதன் மூலம் ஐபோன் 6, Crystal Display Screens கொண்டதாக இருக்கும். மேலும் ஆப்பிள், தாய்வான் செமிகண்டக்டர் நிறுவனம் (Taiwan Semiconductor Manufacturing) உடன் இணைந்து ஐபோன் 6 – கான சிப்செட்களை தயாரிக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 6 – ன் சிறப்பு அம்சங்கள் பற்றி தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி, மேம்படுத்தப்பட்ட ஐஒஸ் 8 இயங்குதளம், ultra-retina வழங்கும் 389 ppi பிக்ட்சல் அடர்த்தி, 8 மெகா பிக்ட்சல் கேமரா மற்றும் bezel-free திரை ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் அம்சமாகக் கருதப்படுகின்றது.