Home கலை உலகம் இளையராஜாவை கொண்டாடிய தெலுங்கு சினிமா!

இளையராஜாவை கொண்டாடிய தெலுங்கு சினிமா!

616
0
SHARE
Ad

Kollywood-news-8753சென்னை, ஏப்ரல் 2 – தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கும் ‘உன் சமையலறையில்’ என்ற படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சாரு பிரியாணி படத்தின் இசைவெளியீடு விழா நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

தனது உடல்நிலை காரணமாக கடைசி நேரத்தில் விழாவிற்கு வந்த இசைஞானி இளையராஜாவிற்கு யுகாதித் திருநாள் சம்பிரதாயங்களோடு தெய்வீக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனக்குக் கொடுக்கப்பட்ட இந்த திடீர் வரவேற்பால் ராஜா மேடையில் மிகவும் நெகிழ்ச்சியோடு இருந்தார். இப்படத்தின் கன்னட பதிப்பிற்கான இசைவெளியீட்டை கடந்த 29-ஆம் தேதி பிரகாஷ்ராஜ் நடத்தி முடித்துவிட்டார்.01-ulavucharu-biriyani-team-felicitates-ilayaraaja1-600(1)

#TamilSchoolmychoice

‘உன் சமையலறையில்’ தமிழ் பதிப்பிற்கான இசைவெளியீடு வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. மலையாளத்தில் வெற்றிபெற்ற சால்ட் அன்ட் பெப்பரி-ன் மறுபிரதியாக உருவாகும் இப்படத்தில் பிரகாஷ் ராஜுடன் சினேகாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.