Home உலகம் உக்ரைனில் பதற்றத்தை தணிக்க, ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

உக்ரைனில் பதற்றத்தை தணிக்க, ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

512
0
SHARE
Ad

Tamil-Daily-News_86272394658ரஷ்யா, ஏப்ரல் 2 – உக்ரைனில் பதற்றத்தை தணிக்க, ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக உக்ரைன், கிரமியாவில் இருந்த தனது இராணுவ மற்றும் அரசு அதிகாரங்களை முழுவதுமாக பின்வாங்கியது.

எனினும் ரஷ்யா மீண்டும் தனது படைகளை இராணுவப் பயிற்சி என்ற பெயரில் உக்ரைனின் எல்லையில் நிறுத்திவருகிறது. இருநாடுகளுக்கிடையே உள்ள பதட்டமான சூழலைக் குறைக்கும் நோக்குடன் அமெரிக்கா, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தற்போது அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரஷ்யப் படை உக்ரைனில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையை தவிர்க்க சர்வதேச நாடுகளுடன் இணைந்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்பதை தெரிவித்துதோம்” என கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் நடந்த சந்திப்பின் போது உக்ரைனில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அதன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்யப் படைகளை விலக்கிக்கொள்வதற்கான பல்வேறு யோசனைகளை ஜான் கெர்ரி கூறியபோதும்,

அவற்றில் எத்தகைய அணுகுமுறையை ரஷ்யா மேற்கொள்ளும் என்பது குறித்து எத்தகைய உறுதிமொழியையும் லாவ்ரோவ் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் சுமார் 4 மணி நேரம் நடந்த இவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.