Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் 1.1 மில்லியன் வாகனங்களை விற்க டொயோட்டா இலக்கு!

சீனாவில் 1.1 மில்லியன் வாகனங்களை விற்க டொயோட்டா இலக்கு!

557
0
SHARE
Ad

toyotaஏப்ரல் 2 – ஜப்பான் நாட்டின் ‘டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன்’ ( Toyota Motor Corp) -னும், அதன் உள்ளூர் நிறுவனங்களான சீனா பா குழுமம் (China FAW Group Corp) மற்றும் குவாங்சவ் குழுமம் (Guangzhou Automobile Group) ஆகியவை இணைந்து கடந்த மார்ச் மாதம் சீனாவில், சுமார் 90,400 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 19% அதிகம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், டொயோட்டா நிறுவனம் 227,900 வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 23.4% அதிகமாகும்.

#TamilSchoolmychoice

டொயோட்டா நிறுவனம், சீனாவில் இந்த ஆண்டு இறுதியில், சுமார் 1.1 மில்லியன் வாகனங்களை விற்பதற்கு தீர்மானித்துள்ளது. அப்படி அது நிறைவேற்றப்பட்டால், 2010 ஆம் ஆண்டு நிர்ணயித்த இலக்கினை அடைந்த சிறப்பினை அடையும்.

கடந்த ஆண்டு, டொயோட்டா நிறுவனம், சீனாவில் 917, 500 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.