ரம்யா, விந்தியா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் தீவிரமாக குதித்திருக்கின்றனர். நமீதாவும் அரசியலுக்கு வர தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தேர்தல் பிரச்சாரங்களிலும் பல்வேறு நாயகிகள் ஈடுபட்டு வருகின்றனர். சித்தார்த்துடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்த சமந்தா, தற்போது அரசியல் பரபரப்பில் சிக்கி இருக்கிறார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் சமந்தாவை சந்தித்து தனது கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும், சமந்தாவின் தந்தை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையறிந்து அவர் நடித்துவரும் பட இயக்குனர்கள் அதிர்ச்சியாகினர். இதுபற்றி சமந்தாவிடம் பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்ட வண்ணம் இருந்தனர். இந்நிலையில் சமந்தா தனது இணையத்தள டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
அரசியலுக்கு வரப்போவதாக என்னைப்பற்றி தகவல் வெளியான வண்ணம் உள்ளது. நான் எந்த கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரம செய்யப்போவதில்லை. எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார் சமந்தா.