Home உலகம் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பற்றி இங்கிலாந்தில் விசாரணை – டேவிட் கேமரூன் உத்தரவு!

எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பற்றி இங்கிலாந்தில் விசாரணை – டேவிட் கேமரூன் உத்தரவு!

601
0
SHARE
Ad

b46edb90-1d0f-457d-a1cb-085022af57dd_S_secvpfஎகிப்த், ஏப்ரல் 2 – எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி, மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதால் அவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டு ராணுவத்தால் அவர் பதவியிறக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக கலகம் செய்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பல முக்கிய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். பலர் தப்பியோடி தலைமறைவாக உள்ளனர்.

தப்பியோடிய அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர், இங்கிலாந்தில் குழுமியதாகவும், எகிப்தில் தோன்றியுள்ள நெருக்கடியில் தங்களின் பங்களிப்பு குறித்து விவாதித்ததாகவும் பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அவர்கள் இங்கிலாந்தில் ஏதேனும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடருவதற்கு திட்டமிட்டுள்ளனரா? என்ற எண்ணத்தில் அவர்களது குறிக்கோள்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும்படி இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வு சவுதி அரேபியாவுக்கான இங்கிலாந்து தூதுவர் ஜான் ஜென்கின்ஸ் தலைமையில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் பிரதமர் அலுவலகத் தகவல் தொடர்பாளர் கூறுகையில்,

முஸ்லிம் சகோதரத்துவ இயக்க நடவடிக்கைகள், அவர்களின் தத்துவம் மற்றும் அந்த அமைப்பின் மீதான அரசின் கொள்கை குறித்த ஓர் அரசாங்க உள் ஆய்விற்கு கேமரூன் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்..