Home நாடு MH370: பயணிகள் மீதான விசாரணை நிறைவு! விமானப் பணியாளர்கள் மீது விசாரணை தொடர்கிறது!

MH370: பயணிகள் மீதான விசாரணை நிறைவு! விமானப் பணியாளர்கள் மீது விசாரணை தொடர்கிறது!

502
0
SHARE
Ad

Tan-Sri-Khalid-Abu-Bakarகோலாலம்பூர், ஏப்ரல் 2 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் சிஐஏ மற்றும் மோஸட் ஆகிய உளவுப் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயணித்திருக்கலாம் என பரவலாக கூறப்படும் ஆரூடங்கள் மற்றும் யூகங்களுக்கு மத்தியில், காவல்துறை அனைத்தும் பயணிகளின் பின்புலங்களையும் ஆராய்ந்து விட்டதாக அறிவித்துள்ளது.

அதில் விமானக் கடத்தல், நாச வேலை மற்றும் மனநலம் சார்ந்த தனிப்பட்ட பிரச்சனைகள் என சந்தேகிக்கும் படியாக எதுவும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், விமானப் பணியாளர்கள் மற்றும் தலைமை விமானி, துணை விமானி ஆகியோர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்ட தங்களின் விசாரணையில், விமானத்தில் பயணித்த 227 பயணிகளும், எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.