Home நாடு ஷாஹிடனின் பரிந்துரைக்கு ம.இ.கா தலைவர்கள் கண்டனம்!

ஷாஹிடனின் பரிந்துரைக்கு ம.இ.கா தலைவர்கள் கண்டனம்!

592
0
SHARE
Ad

tmi-sivarraajh-nov26_300_274_100பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ‘ஒரே மலேசியா’ கொள்கையை இழிவுபடுத்துவது போல் பிரதமர் துறை அமைச்சரான டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி அவரது கருத்துக்கு ம.இ.கா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்கள் அவர்களின் இன தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ஷாஹிடன் கூறிய கருத்தை ம.இ.கா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ்:

#TamilSchoolmychoice

வாக்காளர்களை இன ரீதியில் வாக்களிக்கச் சொல்வது நாட்டிற்கு நல்ல விஷயம் அல்ல. இது மலேசிய மக்களுக்கு கூறப்படும் தவறான தகவல் என்று சிவராஜ் தெரிவித்துள்ளார்.

இனி தலைவர்கள் தாங்கள் விடுக்கும் அறிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சிவராஜ் கூறியுள்ளார்.

ம.இ.கா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ எஸ். வேள்பாரி:Vell-Paari

இது போன்ற அறிக்கைகளை விடும் ஷாஹிடன் காசிமிற்கு அறிவு போதவில்லை என்று வேள்பாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஷாஹிடன் கூறுவதுபோல் இன ரீதியாக வாக்காளர்கள் வாக்களிக்கத் தொடங்கினால், நம் நாட்டிற்கு மூன்று இனங்களைச் சேர்ந்த பிரதமர்களும், ஒவ்வொரு மாநிலங்களிலும் மூன்று இனங்களைச் சேர்ந்த மந்திரி பெசார்களும் தேவைப்படும் என்றும் வேள்பாரி கூறியுள்ளார்.

 மக்கள் சக்தி கட்சி தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். தனேந்திரன்:

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில், நல்லிணக்கத்தை வளர்க்கவும், மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவும் முந்தைய தலைவர்கள் ஏற்படுத்திய கொள்கைகளை ‌ஷாஹிடன் மதித்து நடக்க வேண்டும் என்று தனேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஷாஹிடன் காசிமின் இந்த அறிக்கைக்கு பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜசெக தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.