Home வாழ் நலம் பல்லில் பிரச்சனை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு!

பல்லில் பிரச்சனை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு!

1700
0
SHARE
Ad

White Teeth wallpapersஏப்ரல் 3 – முகத்திற்கு அழகு சேர்ப்பது பல்தான். இறந்த பின்னரும் மண்ணில் மக்கிப் போகமல் இருப்பது பல்தான். பல்லில் ஏதாவது பிரச்சனை என்றால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டால், அது பற்களை மட்டுமல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.

சில சமயம் புற்றுநோயாக மாறும் அபாயம் உண்டு. பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.

இது புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம்.  பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட்.

இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியலாம். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழற்றிவைக்க வேண்டும். 11(2)

தொடர்ந்து அணிவதால், தாடை எலும்பில் பாதிப்பு ஏற்படும்.  நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்சனை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றனர் பல் மருத்துவர்கள்.

பல் ஆரோக்கியத்துக்கு வழிகள்:

*செய்ய கூடியவை- தினமும் காலை,இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

*இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

p52a*பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்சனை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும்.

*செய்ய கூடாதவை- பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
*புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.