Home இந்தியா மிகச் சிறிய மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளரில் 60% பேர் கோடீஸ்வரர்கள்!

மிகச் சிறிய மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளரில் 60% பேர் கோடீஸ்வரர்கள்!

426
0
SHARE
Ad

d0a929fb-0439-46c2-a28a-4bc4b390b5db_S_secvpfஇடாநகர், ஏப்ரல் 3 – அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 60 சதவீதம் பேர், கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 152. இதில் 91 பேருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளது.

அதாவது 60% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வர வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக மறுமலர்ச்சிக்கான அருணாச்சலப் பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள். இதேபோல், பா.ஜ.வில் 24, தேசிய காங்கிரஸ் கட்சி 5 மற்றும் பிபிஏ கட்சி  வேட்பாளர்கள் 4 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், 14 சுயேச்சை வேட்பாளர்களுக்கு சராசரியாக ரூ.8.05 கோடி சொத்து உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.