Home உலகம் MH370: அமெரிக்க இராணுவம் தேடுதல் பணிக்காக 3.3 மில்லியன் டாலர் செலவு – பெண்டகன்...

MH370: அமெரிக்க இராணுவம் தேடுதல் பணிக்காக 3.3 மில்லியன் டாலர் செலவு – பெண்டகன் அறிவிப்பு

601
0
SHARE
Ad

140309-N-ZZ999-007வாஷிங்டன், ஏப்ரல் 3 – MH370 மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 3.3 மில்லியன் டாலர் (10.79 மில்லியன் ரிங்கிட்) செலவு செய்திருப்பதாகவும், கூடுதலாக செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை கணக்கிட்டால் இந்த செலவு இன்னும் இரண்டு மடங்காகலாம் என பெண்டகன் (அமெரிக்க பாதுகாப்பு மையம்) அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க இராணுவத்தின் படைத்தலைவர் ஸ்டீவ் வாரென் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தேடுதல் பணிக்காக பாதுகாப்புத்துறை 3.2 மில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இந்த நிதி தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல்களுக்கும், ஹெலிக்காப்டர்களுக்கும், விமானங்களுக்கும் செலவிடப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

பெண்டகனின் பாதுகாப்புத் துறை செயலாளர் சக் ஹேகெல், வெளிநாட்டு மனித பேரிடர் மற்றும் சிவிக் உதவி நிதி ஆகியவற்றில் இருந்து இந்த 4 மில்லியன் நிதியை தொடக்கத்தில் ஒதுக்கியதாகவும் ஸ்டீப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், கடந்த மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை, இந்தியப் பெருங்கடலில் தேடுதல் பணி தொடங்கிய போது, அமெரிக்க கடற்படை 148,300 டாலர் செலவு செய்திருப்பதாகவும் ஸ்டீவ் தெரிவித்தார்.

இது தவிர, ஆழ்கடலில் சென்று தேடும் பிங்கர் மற்றும் புளூபின் ஆகிய உபகரணங்களுக்கு, ஆரம்ப நிதியாக 3.6 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் அது இறுதியில் எவ்வளவு செலவாகும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் ஸ்டீர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் 8-ஆம் தேதி மாயமானது. இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என கண்டறியப்பட்டதால், தற்போது அங்கு அனைத்துலக தேடுதல் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.