Home இந்தியா வைகோவின் சொத்து மதிப்பு ரூ.3.5 கோடி!

வைகோவின் சொத்து மதிப்பு ரூ.3.5 கோடி!

986
0
SHARE
Ad

vaiko6விருதுநகர், ஏப்ரல் 3 – நேற்று வேட்புமனு தாக்கல் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  அதில் தனது சொத்து மதிப்பு ரூ.3.5 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோ, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்ததுடன் உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார்.

அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் வைகோ பெயரில் 1.53 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் 2.07 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.