Home இந்தியா தந்தைக்காக டுவிட்டரில் ஆதரவு திரட்டும் நடிகை!

தந்தைக்காக டுவிட்டரில் ஆதரவு திரட்டும் நடிகை!

513
0
SHARE
Ad

222906-sonakshi-sinha-at-the-press-conference-for-the-aamby-valley-ind.jpgபாட்னா, ஏப்ரல் 3 – நாடாளுமன்றத் தேர்தலில் பாட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தனது தந்தைக்காக, பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா டுவிட்டரில் ஆதரவு தேடுகிறார்.

பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா, பூனம் தம்பதியினரின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் ‘தபாங்’ உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பாட்னா சாகிப் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான சத்ருகன் சின்ஹா, பா.ஜ கட்சி சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இவரை எதிர்த்து காங்கிரசின் சார்பில் போஜ்புரி நடிகர் குணால் சிங், ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் டாக்டர் கோபால் பிரசாத் சின்ஹா போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் சத்ருகனுடன் அவரது மனைவி பூனம், மகன் லவ் ஆகியோர் உடன் செல்கின்றனர். தன்னுடைய சினிமா வேலையால், தந்தைக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்துக்கு போக முடியாததால் அதற்கென சமூக வலைதளங்களை சோனாக்ஷி பயன்படுத்துகிறார்.

இவரது டுவிட்டர் பக்கத்தை 7 லட்சம் பேர் தொடர்கின்றனர். அதனால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவர் தந்தை சத்ருகனுக்கு ஆதரவாக தேர்தலில் வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவரது தாய் பூனம் கூறுகையில், ‘பாட்னா என்னுடைய புகுந்த வீடு, இங்கு வந்து மக்களுடன் பேசும்போது,

என் குடும்பத்தினருடன் பேசுவது போல உணர்கிறேன். அவர்கள் எங்கள் மீது மிகுந்த அன்பும் ஆதரவும் காட்டுகின்றனர். நாட்டுக்கு தற்போது மோடியை போன்ற ஒரு வலிமையான பிரதமர் தேவை என்று அவர்களிடம் சொல்லி வருகிறோம்  என்றார்.