Home தொழில் நுட்பம் காபிக் கோப்பைகளில் மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் இயங்குதளம்!

காபிக் கோப்பைகளில் மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் இயங்குதளம்!

522
0
SHARE
Ad

microsoft-Satya-Nadellamsftஏப்ரல் 3 – மைக்ரோஃசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தை கணினி மற்றும் செல்பேசிகள் மட்டும் அல்லாது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சிறிய மின்பொருட்களிலும் செயல்படுத்த இருக்கிறது.

‘Windows on the Internet of Things’ என்ற பெயரில் அறிமுகமாகும், இந்த தொழில்நுட்பத்தை காபிக் கோப்பைகள், சிரிய ரக ரோபோக்கள் மற்றும் இசைக் கருவியான பியானோ போன்றவற்றில் பயன்படுத்த இருக்கிறது. இது குறித்து நேற்று (புதன்கிழமை) நடந்த மாநாட்டில் மைக்ரோஃசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து மைக்ரோஃசாப்ட்டின் இயங்குதளங்கள் உருவாக்கும் அமைப்பின் தலைவர் டெர்ரி மையர்சன் கூறுகையில், ” விண்டோஸ் இயங்குதளங்களை பயனர்களுக்கு நன்கு அறிமுகமான சிறிய மின் பொருட்களில் பயன்படுத்த உள்ளோம். ‘Windows on the Internet of Things’ தொழிநுட்பம் முழுமை பெரும் வேளையில் அதன் மென்பொருள் இலவசமாக வழங்கப்படும். இதற்கான அறிவிப்புகள் இந்த ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

கூகுள் நிறுவனம் திறன் கடிகாரங்களை அறிமுகப்படுத்த இருக்கும் இந்த நேரத்தில், மைக்ரோஃசாப்ட்டின் இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.