Home கலை உலகம் எந்த நேரத்திலும் நடிப்புக்கு முழுக்கு போட தயார் – இலியானா!

எந்த நேரத்திலும் நடிப்புக்கு முழுக்கு போட தயார் – இலியானா!

1019
0
SHARE
Ad

Ileana Returns Tamil movies watch and download hot linksசென்னை, ஏப்ரல் 4 – எந்நேரமும் நடிப்புக்கு முழுக்குபோட தயாராக இருக்கிறேன் என்றார் இலியானா. தமிழில் ஒன்றிரண்டு படங்களும், தெலுங்கிலும் நடித்து வந்த இலியானா பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார்.

அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு வரவில்லை. இதில் விரக்தி அடைந்தவர், தத்துவம் பேச தொடங்கி இருக்கிறார். அவர் கூறியதாவது, நடிக்க வந்த புதிதில் நிறைய போராட வேண்டி இருந்தது. திறமையை நிரூபித்தால்தான் ரசிகர்கள் ஏற்பார்கள்.

இல்லாவிட்டால் படப்பிடிப்பு தளத்தில்கூட மரியாதை கிடைக்காது. இந்தியில் பர்பி படத்தில் நடிக்க சென்றபோது யாரும் என்னை மதிக்கவில்லை. நான் கடினமாக உழைப்பதை கண்டபிறகுதான் மதிக்க தொடங்கினார்கள். நடிப்பு என்பது ஒரு வேலைதான். அதில் ஈடுபாடு உண்டு.

#TamilSchoolmychoice

அதேசமயம் ஒவ்வொரு நடிகைக்கும் சொந்த வாழ்க்கை வேறொன்று இருக்கிறது. என்றுமே இளமையாக இருக்க முடியாது. இளமை குறையும்போது ரசிகர்கள்கூட வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

நடிப்புதான் உன் வாழ்க்கை என்று இருந்துவிடாதே ஒரு நாள் அதை விட வேண்டி இருக்கும் என்று என் அம்மா எனக்கு கூறினார். சினிமாவுக்கு விடை சொல்லும் நேரம் எப்போது வந்தாலும் சந்தோஷமாக முழுக்குபோட தயாராக இருக்கிறேன் என இலியானா கூறினார்.