Home கலை உலகம் கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியுடன் ஊர் சுற்றும் இலியானா!

கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியுடன் ஊர் சுற்றும் இலியானா!

752
0
SHARE
Ad

Virat-Kohliடெல்லி, ஜூன் 19 – சினிமா நடிகர்களுடன் நடிகைகள் ஊர் சுற்றிய காலமெல்லாமல் மாறிவிட்டது. இப்போது விளையாட்டு வீரர்களுடன் நடிகைகளை ஊர் ஊராக சுற்றும் சம்பவங்கள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா சமீபகாலமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா மட்டுமின்றி, வீராட் கோஹ்லி எந்தெந்த அயல்நாடுகளுக்கு விளையாட போகிறரோ, அவரும் பட அதிபர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவார்.

#TamilSchoolmychoice

அங்கே வீராட் விளையாடும் அழகை ரசிகர்களுடன் அமர்ந்து ரசிப்பவர், அவ்வப்போது கைதட்டி,விசில் அடித்து தனது ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்தி கொண்டேயிருப்பார்.

இதையடுத்து அவர்கள் காதல் ஜோடிகளாக வெளிநாட்டு கடற்கரைகளில் சுற்றியது, புகைப்படங்களாக இணையதளங்களில் பரவி பரபரப்பு கூட்டின.

இந்தநிலையில், அனுஷ்காவுடனான நெருக்கம், வீராட்டுக்கு புளித்து விட்டதோ என்னவோ, சமீபத்தில் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் இலியானாவுடன் இணைந்து நடித்ததில் இருந்து இலியானா பக்கம் தாவி விட்டார் வீராட்.

அனுஷ்கா சர்மாவைப்போன்று விளையாட்டு தளங்களுக்கு செல்லாமல் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சென்று வீராட்டுடன் நட்பு வளர்க்கிறாராம் இலியானா.

இந்த செய்தி மும்பை பத்திரிகைகளில் புகைந்தபோதும், வீராட்டை விட்டு விலகாமல் ஜோடியாக வலம் வருகிறாராம் இலியானா. ஆனால், வீராட் கோஹ்லி இப்படி கட்சி மாறி விட்டதால் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் அனுஷ்கா சர்மா.