Home கலை உலகம் இலியானாவுக்கு முத்தம் கொடுத்த கதாநாயகன்!

இலியானாவுக்கு முத்தம் கொடுத்த கதாநாயகன்!

646
0
SHARE
Ad

hot ileana dcruz hd wallpapersசென்னை, மார்ச் 15 – இலியானாவுக்கு பாலிவுட் கதாநாயகன் அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். நண்பன்,  கேடி உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா. கடந்த 2012-ஆம் ஆண்டு ‘பர்பி‘ என்ற படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார்.

படம் வெற்றி பெற்றாலும் வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. ‘ஹேப்பி என்டிங்‘, ‘மெயின் தேரா ஹீரோ‘ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மெயின் தேரா படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தென்னிந்திய படங்களிலேயே முத்தக் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார். ஆனால் இயக்குனர் டேவிட் தவான் விடவில்லை. நிச்சயமாக இது கதைக்கு தேவை என்று வற்புறுத்தியதை அடுத்து ஒப்புக்கொண்டார். கதாநாயகனும் வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொண்டார்.

#TamilSchoolmychoice

இலியானாவுக்கு லிப் டு லிப் கொடுத்து அசத்தினார். இதுதான் வருணுக்கு கிடைத்த முதல் முத்தக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்காட்சி படமானபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே படப்பிடிப்பு தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.