Home உலகம் சிலியை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்குதல்!

சிலியை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்குதல்!

617
0
SHARE
Ad

Sendai Earthquake - Large 03டோக்கியோ, ஏப்ரல் 4 – சிலியை தொடர்ந்து ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிலி நாட்டில் நேற்று அதிகாலை 8.2 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. இதில் 6 பேர் பலியாயினர்.

பலர் படுகாயம் அடைந்தனர். மக்கள் இன்று விடியும் வரை சாலைகளில் பீதியுடன் இரவை கழித்தனர். இந்நிலையில், ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள குஜி, ஐவேட் போன்ற பகுதியில் இன்று அதிகாலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து லேசான சுனாமி அலைகள் தாக்கின. கடந்த 201-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அதை தொடர்ந்து சுனாமி தாக்குதலில் ஐவேட் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இவாட் பகுதி கடலில் மாறுபாடு ஏற்பட்டவுடன், முன்னெச்சரிக்கையாக 22,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சிலி, ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதால், இந்தோனேசியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் சுனாமி தாக்குதல் அபாயம் இல்லை என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.