Home வணிகம்/தொழில் நுட்பம் ஆஸ்திரேலியா, ஜப்பானுக்கிடையே விரைவில் தடையில்லா வர்த்தகம்!

ஆஸ்திரேலியா, ஜப்பானுக்கிடையே விரைவில் தடையில்லா வர்த்தகம்!

586
0
SHARE
Ad

Tony Abbotஏப்ரல் 8 – ஆஸ்திரேலியாவின் வணிகரீதியான தொடர்புகளில் சீனாவிற்கு அடுத்து ஜப்பான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதேபோல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சி மற்றும் பண்ணைப் பொருட்களின் மிகப்பெரிய வாடிக்கையாளராகவும் விளங்குகின்றது. இவ்வாறு ஏற்றுமதி, இறக்குமதியில் இணக்கமாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவும்,  ஜப்பானும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ள உள்ளன.

இதனைத் தொடர்ந்து  ஜப்பானில் இந்த வாரம் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (படம்) இதற்கான முடிவுகளை ஜப்பான் அரசுடன் சேர்ந்து விரைவில் எடுப்பார் என தெரியவருகிறது. இதற்காக அவருடன் 600 பேர் கொண்ட வணிகக்குழு ஒன்று ஜப்பான் சென்றுள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், “ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று விரைவில் மேற்கொள்ளுப்படும். அதுமட்டும் அல்லாமல் இந்த சந்திப்பின்போது டோக்கியோவில் ஏற்படும் சில சிறிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என்று அபோட் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பேச்சுவார்த்தையின் முக்கியப் பகுதிகளாகக் கூறப்பட்டு வரும் மாட்டிறைச்சி ஏற்றுமதியின் வரித்தீர்வுகளிலும், ஜப்பானியக் கார் ஏற்றுமதிகளிலும் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன.

ஜப்பானிலிருந்து தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியா மற்றும் சீனாவிற்கும் செல்லும் அபோட் அந்தப் பகுதியுடனான பொருளாதார உறவுகளையும் ஊக்குவிக்கும் எண்ணத்தில் இருக்கின்றார்.