Home இந்தியா குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தபால் ஓட்டு!

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தபால் ஓட்டு!

522
0
SHARE
Ad

26401_S_Pranab-Mukherjeeபுதுடெல்லி, ஏப்ரல் 8 –  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தபால் மூலம் வாக்களிக்கவுள்ளார். பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஆவார்.

இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்துக்கு சென்றால்,

மாநில அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்பதால் அவர் தபால் மூலம் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

வழக்கமாக குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி அல்லது நிர்மான் பவனில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் குடியரசுத் தலைவர்கள் ஓட்டு போடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.