Home கலை உலகம் ஜூன் 12-ல் இயக்குநர் விஜய் – அமலாபால் திருமணம்!

ஜூன் 12-ல் இயக்குநர் விஜய் – அமலாபால் திருமணம்!

662
0
SHARE
Ad

56899938-04fc-4198-a19d-2a7f3942230a1சென்னை, ஏப்ரல் 8 – நிஜத்தில் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஜூன் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தெய்வத்திருமகன் படத்தை இயக்கிய விஜய், அப்படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக அமலாபாலையும் நடிக்க வைத்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இருவரும் இதை இப்போது வரை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தொடர்ந்து இயக்குநர் விஜய், தனது அடுத்தபடமான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபாலை நடிக்க வைத்தார்.

#TamilSchoolmychoice

இருதினங்களுக்கு முன்னர் கூட தனது சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமலாபாலையே ரொம்பவே மிகைப்படுத்தி முன்னுரிமை கொடுத்தார்.

இந்நிலையில் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக கூறாத இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும், அதுவும் ஜூன் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற போவதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.