Home தொழில் நுட்பம் திறன்பேசிகளின் திருட்டைத் தடுக்க இரு வசதிகளை அறிமுகப்படுத்தியது சாம்சங்!

திறன்பேசிகளின் திருட்டைத் தடுக்க இரு வசதிகளை அறிமுகப்படுத்தியது சாம்சங்!

503
0
SHARE
Ad

Samsung logo 300 x 200ஏப்ரல் 8 – சாம்சங் நிறுவனம் பயனாளர்களின் திறன்பேசிகள் திருடுபோவதைத் தடுப்பதற்காக Find My Mobile மற்றும் Activation Lock என்ற இரு புதிய வசதிகளை உருவாக்கியுள்ளது. இந்த இரு வசதிகளும், வரும் வெள்ளிக்கிழமை அறிமுகமாக உள்ள சாம்சங்கின் Galaxy S5 ல் செயல்படுத்தப்பட உள்ளது.

தங்கள் நிறுவனம் பயனாளர்களின் திறன்பேசிகள் திருடப்படுவதையும், பின்னர் அது தவறாக பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சாம்சங் தெரிவித்ததுள்ளது.

அமெரிக்காவில் திறன்பேசிகளை குறிவைத்து அதிகமான திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால் அதனைத் தடுக்கும் வகையில் ‘Kill Switch’ போன்ற புதிய தொழிநுட்பங்களை உருவாக்குமாறு திறன்பேசிகளின் தயாரிப்பு நிறுவனங்களிடம் அந்நாட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த சிலவாரங்களுக்கு முன்னாள் கேட்டுக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதனை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் தற்போது இந்த இரு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கனவே ஆப்பிள் நிறுவனமும், கடந்த வருடம் அறிமுகப்படுத்திய ஐபோன்-ல், இந்த Activation Lock வசதியை மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.