ஏப்ரல் 8 – துருக்கியில் யூ-டியூப் இணையதளத்திற்கு விதித்துள்ள தடையை எதிர்த்து, அந்நிறுவனம் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
துருக்கியில் யூ-டியூப் வழியாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றிய காணொளிக் காட்சிகள் வெளியானதால், அதற்கு தடை விதித்து அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் உத்தரவிட்டிருந்தார். இதே போன்றதொரு தடையை ‘ட்விட்டர்’ (twitter) ஊடகத்திற்கும் அவர் விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை எதிர்த்து வழக்கு தொடுத்த ட்விட்டர் நிறுவனம் போராடி, சமீபத்தில் தடையை நீக்கியது. இதனால் யூ-டியூப் நிறுவனமும் தற்போது வழக்கு தொடுத்துள்ளது.
இது குறித்து கடந்த 2-ஆம் தேதி விசாரித்த நீதிபதி, யூ-டியூப் இணையதளத்திற்கு விதித்துள்ள தடையினால் பொதுமக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கும் வகையில் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது. மேலும் கடந்த 4-ஆம் தேதி, கேல்பஷி நகர நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யூ-டியூபினை முழுவதுமாக தடை செய்வதற்கு மாறாக, சர்ச்சைகளை ஏற்படுத்திய கோப்புகளை மாத்திரம் முடக்குவது சரியாக இருக்கும்” எனக் கருத்து தெரிவித்துள்ளது.
விரைவில் யூ-டியூபிற்கான தடையும் நீக்கப்படலாம் என அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.