Home நாடு விமானத்தின் பாகங்களை சில தினங்களில் கண்டறிந்துவிடுவோம் – ஆஸ்திரேலியா தகவல்

விமானத்தின் பாகங்களை சில தினங்களில் கண்டறிந்துவிடுவோம் – ஆஸ்திரேலியா தகவல்

450
0
SHARE
Ad

angus_houston_0104-540x371பெர்த், ஏப்ரல் 9 – மாயமான MH370 விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் இன்னும் சில தினங்களில் விமானத்தின் பாகங்களை கண்டறிந்து விடுவோம் என்று உறுதியளித்துள்ளனர்.

அனைத்துலக மீட்புப் படையினருக்குத் தலைமை வகிக்கும் அதிகாரியான ஆங்கஸ் ஹௌஸ்டன் (படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைய சமிக்ஞைகள் கிடைக்கும் அந்த கடல்பகுதியை நெருங்கிவிட்டோம். நிச்சயமாக அதன் அடியில் விமானத்தின் பாகங்கள் இருக்கக்கூடும். இன்னும் சில தினங்களை அதைக் கண்டறிந்துவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 4 சமிக்ஞைகளை ஆஸ்திரேலிய கடற்படையினர் கண்டறிந்துள்ளனர். அந்த கடற்பகுதியின் அடியில் அமெரிக்க கடற்படை உபகரணங்களைக் கொண்டு விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டறிந்துவிடலாம் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

#TamilSchoolmychoice