இந்த நேரத்தில், “டி-டே என்ற இந்தி படத்தில், பாலியல் தொழிலாளியாக ஸ்ருதி நடித்திருந்தது, விமர்சனத்திற்கு உள்ளாகியது. அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டி, சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது தெலுங்கு படங்களிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டுகிறார். ஏவடு, ரேஸ்குராம் ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியாக நடித்து, நடனம் ஆடியுள்ளார். இந்த படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
சுருதிஹாசன் தெலுங்கில் நடித்த கப்பர்சிங், பலுபு, ஏவடு ஆகிய மூன்று படங்களும் வெற்றியடைந்தது. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த ரேஸ்குராம் படம் ஏப்ரல் 1-ஆம் தேதி வர இருக்கிறது. இப்படங்களில் சுருதிஹாசன் கவர்ச்சியாக நடித்த படங்களின் புகைப்படங்கள் இதுவரை வெளிவராமல் இருந்தது.
தற்போது அந்த படங்கள் வெளியிடபட்டுள்ளது. இது குறித்து நடிகை சுருதி கூறியதாவது என்னைவிட கவர்ச்சியாகா எத்தனையோ பேர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், என்னை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்.
மேலும், சினிமாவில் எதுவும் என் முடிவல்ல. இயக்குநர்கள் சொல்வதை நான் செய்கிறேன். அந்தந்த கதாபாத்திரமாக மாறி நடிக்கிறேன். இதில், தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறினார் சுருதி ஹாசன்.