Home நாடு MH370: உண்மையைக் கண்டறிய வேண்டும் – ஹிஷாமுடின்

MH370: உண்மையைக் கண்டறிய வேண்டும் – ஹிஷாமுடின்

549
0
SHARE
Ad

hishammuddin-husseinகோலாலம்பூர், ஏப்ரல் 9 – காணாமல் போன எம்எச்370 விமான விவகாரத்தில் அதன் பயணிகள் சம்பந்தப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் இல்லாவிட்டாலும் புதிய தகவல்கள் கிடைத்தால் விசாரணை மறு ஆய்வு செய்யப்படும் என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணை எங்கு நடைபெறுகிறது என்பது முக்கியமல்ல, காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் செய்தியாளர்கள் கேள்விக்கு ஹிஷாமுடின் பதிலளித்துள்ளார்.

எம்எச்370 தேடும் பணி இரண்டாவது மாதத்திற்கு சென்று விட்டது. இன்னும் விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது ஆஸ்திரேலிய கடற்படையினர் தீவர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

புதிதாக இரண்டு சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதாகவும் நீர்மூழ்கிக் கப்பலும் முக்குளிப்போரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையில் கறுப்புப் பெட்டி கிடைக்கப் பெறவில்லை. கறுப்புப் பெட்டி கிடைத்தவுடன் உண்மை நிலவரங்கள் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானி, துணை விமானி மற்றும் இதர விமான ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்ந்து தீவிரபடுத்தப்பட்டு வருவதாகவும் ஹிசாமுடின் கூறினார்.

இதனிடையே, காணாமல் போன விமானம் குறித்து எந்தவொரு ஆருடங்களையும் கூற வேண்டாம் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.