கோலாலம்பூர், ஏப்ரல் 9- நாட்டில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 63 பேர் டிங்கி காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் மொத்தம் 26,107 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படாவிட்டால் நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் துயரம் விளைவிக்கக்கூடிய ஆபத்தமாக இது உருவெடுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
“சிறு கடி… பெரிய அபாயம்” என்ற கருப்பொருளில் ஏடிஎஸ் கொசுக்களால் விளையும் அபாயத்தை உலக சுகாரதத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் சுப்ரமணியம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
உலகில் சுமார் 250 கோடி பேர் இப்போது டிங்கி காய்ச்சல் மிகப் பெரிய அபாயத்திற்கு உள்ளாகும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர். ஆண்டு தோறும் 5 கோடி முதல் 10 கோடி வரையிலான மக்கள் இந்த டிங்கி காய்ச்சல் நோய்க்கு ஆளாகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் மட்டுமல்லாது உலகளாவிய நிலையிலும் டிங்கி இருப்பதை இந்நிலை உணர்த்துகிறது என்றும் சுப்ரமணியம் கூறினார்.