Home இந்தியா கேரளாவில் இன்று, 20 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல்!

கேரளாவில் இன்று, 20 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல்!

436
0
SHARE
Ad

kerala-political-mapதிருவனந்தபுரம், ஏப்ரல் 10 – கேரளத்தில்  20 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்கிறார்கள். இந்த தேர்தலில் மொத்தம் 269 பேர் களத்தில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மட்டுமே இருமுனை போட்டி இருந்து  வந்தது. ஆனால் இந்த முறை பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவதால்   மும்முனைப் போட்டி  ஏற்பட்டுள்ளது.

இதில் 60 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தமிழக சிறப்பு காவல் படையினரும், மத்திய காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

#TamilSchoolmychoice