Home கலை உலகம் பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ஆம் பாகம் – ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா!

பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ஆம் பாகம் – ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா!

784
0
SHARE
Ad

tamanna-swim-659x957சென்னை, ஏப்ரல் 10 – ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் 2 -ஆம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

சந்தானம் கிட்டத்தட்ட இன்னொரு நாயகனாகவே வந்தார். ராஜேஷ் எம் இயக்கினார். இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டார். இதுபற்றி பலரிடமும் கருத்துக் கேட்டபோது, கட்டாயம் எடுக்க வேண்டும் என்றே கூறியிருந்தனர்.

ஆர்யாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்பட்டதால், படவேலைகள் தொடங்கின. இதில் ஆர்யா ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடந்தது. நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா என யோசித்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் நயன்தாரா இதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர்.தமன்னா தற்போது இரு இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

இப்படங்கள் முடிந்ததும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு வருகிறார். இது குறித்து தமன்னா கூறும்போது, ‘காமெடி படங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும்.

காமெடி கலந்த நாயகியாக நான் நடிக்க ஆசைப்படுகிறேன். பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்,” என்றார்.